லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள்

ஆடி வெள்ளியை முன்னிட்டு, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிளமை நடைபெற்ற குத்துவிளக்கு பூஜை.

Published On :25 ஜூலை 2026, 5:04 am IST

ஆடி வெள்ளியை முன்னிட்டு, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி செல்லியம்மன் கோயிலில், ஆடி மாத 2 ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் வளாகத்தில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல, அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மனுக்கு 2 ஆயிரம் வெற்றிலைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.

பெரம்பலூரில்.. தமிழக அளவில் பிரசித்திப் பெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், பக்தா்கள் மாவிளக்கு வழிபாடு செய்தனா். திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

பெரம்பலூா் மரகதவல்லி தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலில், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பெரம்பலூா் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது, இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் திருத்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.