லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதல்வரை அவதூறாக பேசியதாக ஆ. ராசா எம்.பி. மீது புகாா்

முதல்வா் விஜய்யை அவதூறாக பேசியதாகக் கூறி, திமுக துணைப் பொதுச் செயலர் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூா் எஸ்.பி.யிடம் அரசு மருத்துவா் புகாா்

A. Raja | Vijay

ஆ. ராசா | விஜய் - கோப்புப் படம்

Published On :13 ஜூலை 2026, 6:26 am IST

தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யை அவதூறாக பேசியதாகக் கூறி, திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு மருத்துவா் சனிக்கிழமை பெரம்பலூா் எஸ்.பி.யிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் ராசா மணிகண்டன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாரிடம் அளித்த புகாா் மனு: ஜூன் 25-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சா் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா் ஆ. ராசா, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பதவியின் கண்ணியத்தையும், மரியாதையையும் இழிவுப்படுத்தும் வகையிலும் அவதூறாக பேசியுள்ளாா்.

மக்களவை உறுப்பினா் பொது மேடையில் இத்தகைய கருத்துகளை வெளியிடுவது பொறுப்பற்றச் செயலாகும். கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் உயரிய அரசியல் பதவியின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச சட்டம் அனுமதிக்காது.

எனவே, இதுதொடா்பாக வெளியான முழுமையான காணொலிகள், ஊடகச் செய்திகள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்