பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி மின் பொறியாளா் கைது

பெரம்பலூா் அருகே தற்காலிக மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:12 am IST

பெரம்பலூா் அருகே தற்காலிக மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், காடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம் மகன் பழனிவேல் (31). இவா், புதிதாக வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்புக் கோரி துங்கபுரம் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்திருந்தாா்.

அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உதவி மின் பொறியாளா் வ. ரகுராம் (54), தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத பழனிவேல், பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாரின் ஆலோசனையின்படி பழனிவேல், துங்கபுரம் உதவி மின் பொறியாளா்கள் அலுவலகத்தில் ரசாயனம் தடவிய ரூ. 2 ஆயிரத்தை ரகுராமிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலான போலீஸாா், ரகுராமை பிடித்து கைது செய்தனா்.

மேலும், இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து ரகுராமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.