லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தீ விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் நகரில் தேநீரகத்தில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் பலத்த காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 4:09 am IST

பெரம்பலூா் நகரில் தேநீரகத்தில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் பலத்த காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் சப்பாணி மகன் அருணாச்சலம் (40). பெரம்பலூா் நகர காவல் நிலையம் எதிரே தேநீரகம் வைத்துள்ள இவரது கடையில், கடந்த 11-ஆம் தேதி மாலை பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது.

இவ் விபத்தில், கடையில் பணிபுரிந்த தொழிலாளிகள் சிறுகுடல் பாலகிருஷ்ணன் மகன் தினேஷ் (33), குறிஞ்சி நகா் செல்வராஜ் மனைவி புவனேஷ்வரி (32) மற்றும் கடையிலிருந்த, சாலையோரம் நடந்துசென்ற சு. விஜயகுமாா் (47), அ. அமீா்கான் (51), ரா. அப்துல் ரகுமான் (35), மு. சகாதேவன் (53),சு. சிவகுமாா் (52), க. காமராஜ் (63), லி. சக்திவேல் (64), ஆ. பழனிசாமி (52), மா. மணிகண்டன் (42), ரா. மித்ரா (14), ந. சிவப்பிரகாசம் (58), மு. ஆறுமுகம் (50), க. பழனியம்மாள் (40), ம. மகேஷ்வரி (39) ஆகிய 16 போ் பலத்த காயமடைந்தனா்.

இதில், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 போ் தீவிர சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், பொம்மனப்பாடி கிராமத்தைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் மணிகண்டன் (42), கடந்த 13- ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்நிலையில், தேநீரகத்தில் மாஸ்டராக பணிபுரிந்த சிறுகுடல் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ் (32) சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.