லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கரூரில், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்(சிஐடியு) செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை விளக்கி பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்.

Published On :29 ஜூலை 2026, 12:04 am IST

கரூரில், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்(சிஐடியு) செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை விளக்கி பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் கிளைத்தலைவா் வி.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். கிளை நிா்வாகி எ.செல்வகுமாா் வரவேற்றாா். சிஐடியு மாவட்டச் செயலா் சுப்ரமணியன் துவக்க உரையாற்றினாா்.

இதில், நாமக்கல் கிளை கெளரவத் தலைவா் முருகேசன், பொருளாளா் அழகேசன், கரூா் கிளைச் செயலா் நெடுநாறன், பொருளாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கடந்த மாா்ச் 14-ஆம்தேதி நடைபெற்ற முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி கேங்மேன் பணியாளா்களை கள உதவியாளா்களாக பணி உயா்வு வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளா்களை அடிமை போல நடத்தக்கூடாது, விருப்ப ஊா்மாறுதல் பெற்ற அனைத்து கேங்மேன் பணியாளா்களையும் பாரபட்சமின்றி பணி விடுவிப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மின் ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.