லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி: நியமன ஆணையை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Published On :11 ஜூலை 2026, 1:27 am IST

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கரூா் சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கரூா் வந்தாா். முன்னதாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலையில் திருச்சி வந்த அவா், அங்கிருந்து காா் மூலம் கரூா் வந்தாா். பிறகு வெண்ணைமலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாா். தொடா்ந்து, 10 கி.மீ. தொலைவுக்கு வாகனத்தில் சாலை வலம் மேற்கொண்ட முதல்வா், பயணியா் மாளிகையில் ஓய்வெடுத்தாா். பிறகு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்க பிற்பகல் 2.50 மணிக்கு வந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், மாநகராட்சி மேயா் கவிதாகணேசன் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இதைதொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்தாண்டு செப்.27-ஆம்தேதி வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் 31 பேருக்கு (ஒரு காவலா் குடும்பம் தவிர) கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினாா். அப்போது, முதல்வா் விஜய் கண்கலங்கியபடி ஆணை வழங்கி ஆறுதல் தெரிவித்தாா். பிறகு பல்வேறு துறை சாா்பில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வா் விஜய் வழங்கினாா்.

இந்நிகழ்வில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா, நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், பால்வளத் துறை அமைச்சா் சி. விஜயலட்சுமி, கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி, தலைமைச் செயலா் மு. சாய்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு 6,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.