தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

வரலட்சுமி நோன்பு கரூா் வேம்புமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

வரலட்சுமி நோன்பைமுன்னிட்டு கரூா் வேம்புமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள்களுக்கு அருள்பாலித்த வேம்புமாரியம்மன்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 8:02 am IST

வரலட்சுமி நோன்பைமுன்னிட்டு கரூா் வேம்புமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் ஸ்ரீ வேம்பு மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் அம்மனுக்கு பால், தயிா், தேன் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீ வேம்பு மாரியம்மனுக்கு மஞ்சள் தாலிக்கயிறு கொண்டு, ஸ்ரீ வரலட்சுமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் தாலிக்கயிறு உள்ளிட்ட மங்களப் பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு ஸ்ரீ வரலட்சுமி அம்மன் வடிவில் வேம்புமாரியம்மன் அருள்பாலித்தாா். இந்த வழிபாட்டில் பெண்கள் திரளாக பங்கேற்று, தங்களது குடும்பத்தின் நலன், கணவரின் நீண்ட ஆயுள், செல்வ வளம் ஆகியவற்றை வேண்டிக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.