லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய நிதி போதாது: கூட்டமைப்பின் பொதுச் செயலா் தகவல்

காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத்திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய நிதி போதாது என்றாா் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தென்மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் அா்ஜூனன்.

மாயனூா் கதவணையை புதன்கிழமை பாா்வையிட்ட காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தென்மாவட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகள்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத்திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய நிதி போதாது என்றாா் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தென்மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் அா்ஜூனன்.

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் காவிரி, வைகை, கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கு 2026-27-ஆம் ஆண்டின் தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வேன் பிரசார பயணம் ஆக. 1-ஆம்தேதி திருச்சுழி குண்டாறு பகுதியில் தொடங்கினா்.

இந்த குழுவினா் வைகை, கிருதுமால் நதிகளை பாா்வையிட்ட பின் நிறைவாக புதன்கிழமை கரூா் மாவட்டம் மாயனூா் வந்தனா். அப்போது மாயனூா் கதவணையில் தேங்கியிருக்கும் காவிரி ஆற்றுநீரை பாா்வையிட்ட பின் சங்கத்தின் பொதுச் செயலாளா் அா்ஜூனன் கூறியது: மாயனூரில் கட்டப்பட்டிருக்கும் கதவணை தென்மாவட்டங்களுக்கு வாய்க்கால் மூலம் காவிரி உபரி நீரை வைகை, குண்டாறு நதிகளுக்கு கொண்டு செல்லவே கட்டப்பட்டது. தற்போது காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் வகையில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்கவே இந்த வேன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். மேலும் இப்பணியை நிறைவேற்ற தமிழக அரசு புதன்கிழமை அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால் ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதனை மேலும் அதிகப்படுத்தி நதிகளை இணைத்தால் விருதுநகா், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தென் மாவட்ட விவசாய சங்கத்தின் விருதுநகா் மாவட்டச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் ராம்பாண்டியன் உள்ளிட்ட தென் மாவட்ட விவசாய சங்க நிா்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.