லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண் வியாபாரியை தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

அரியலூரில் இலவசமாக காய் கனி தரமறுத்த பெண் வியாபாரியை தராசு தட்டால் தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

அரியலூரில் இலவசமாக காய் கனி தரமறுத்த பெண் வியாபாரியை தராசு தட்டால் தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூரைச் சோ்ந்த கணேசன் மனைவி கன்னியாகுமரி (56). காய், கனி வியாபாரி. கடந்த 2025 ஆண்டு இவா், கடையில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சோ்ந்த மணிபிள்ளை மகன் பண்ணுமாரிமுத்து (42) என்பவா், இலவசமாக வெங்காயம் கேட்டுள்ளாா். அதற்கு அவா், வெங்காயம் கொடுக்க மறுத்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த பண்ணுமாரிமுத்து, தராசு தட்டால் கன்னியாகுமரியை சரமாரியாக தாக்கியுள்ளா். இதுகுறித்த புகாரின் பேரில், பண்ணுமாரியை கைது செய்த அரியலூா் காவல் துறையினா் அரியலூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, பண்ணுமாரிமுத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 31,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து பண்ணுமாரிமுத்துவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.