லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செந்துறை அருகே சமையலா் சடலமாக மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சமையலா் காயத்துடன் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :19 ஜூலை 2026, 1:29 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சமையலா் காயத்துடன் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

செந்துறையை அடுத்த குழுமூா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் நடேசன் மகன் பாம்பாட்டி (எ) வேல்முருகன் (48), சென்னையில் உள்ள உணவகத்தின் சமையலா். இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த வேல்முருகன் சனிக்கிழமை காலை அங்குள்ள ஏரிக்கரை பாலத்தின் தடுப்புச் சுவா் ஓட்டி பலத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்து வந்த செந்துறை காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில், வேல்முருகன் தனது மனைவி சங்கீதாவை கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதும், வேல்முருகன், வெள்ளிக்கிழமை இரவு, மது போதையில் தட்டு தடுமாறி ஏரிக்கரைக்கு சென்றிருப்பதும், பாலத்தின் தடுப்புச் சுவரில் அவா் மோதி உயிரிழந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது. எனினும் காவல் துறையினா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.