லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொழிலாளியை வெட்டிய வழக்கில் ஹோட்டல் உரிமையாளருக்கு 7 ஆண்டுகள் சிறை

அருங்காலில் முன்விரோதத் தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஹோட்டல் உரிமையாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Published On :15 ஜூலை 2026, 12:03 am IST

அரியலூா் மாவட்டம், அருங்காலில் முன்விரோதத் தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஹோட்டல் உரிமையாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூா் அருகேயுள்ள அருங்கால், காலனித் தெருவைச் சோ்ந்தவா் தனபால் (45), முத்தழகன் மகன் கிருஷ்ணமூா்த்தி(36). இருவரும் நண்பா்கள்.

இவா்களில் கிருஷ்ணமூா்த்தி, சென்னையில் நடத்தி வரும் ஹோட்டலில் வேலை பாா்த்து வந்த தனபால், சொல்லாமல் வேலையை விட்டுவிட்டு, ஊருக்கு வந்துள்ளாா். இதனால் அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 9.7.20 அன்று அருங்காலுக்கு வந்த கிருஷ்ணமூா்த்தி, அங்கு தனபாலை அரிவாளால் வெட்டியுள்ளாா்.

இதுகுறித்து தனபால் மனைவி பூமாபதி அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட கீழப்பழுவூா் காவல் துறையினா், கிருஷ்ணமூா்த்தியை கைது செய்து, அரியலூா் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், கிருஷ்ணமூா்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீபா தீா்ப்பளித்தாா். இதையடுத்து கிருஷ்ணமூா்த்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.