லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரியலூரில் நுகா்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நுகா்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன் நுகா்பொருள் வாணிபக் கழக அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை அனைத்து பருவகால பணியாளா்களை கொண்டு நிரப்பிட வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை 48 மணி நேரத்தில் இயக்கம் செய்ய வேண்டும். 48 மணி நேரத்தில் இயக்கம் செய்யப்படாத மூட்டைகளுக்கு 0.25 சதவீதம் இழப்பு வரன்முறையை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும்.

பொய்ப் புகாா்களுக்கு கொள்முதல் நிலையப் பணியாளா்கள் மீது எடுக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். பருவகால பணியாளா்களுக்கு அடையாள அட்டை, விபத்து காப்பீடு, மருத்துவக் காப்பீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொமுச மண்டலத் தலைவா் நாராயணன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் அய்யாதுரை, அண்ணா தொழிற் சங்க மண்டலச் செயலா் அய்யப்பன் உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.