மணப்பாறை அருகே மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் கண்ணூா் பிரிவினா் வியாழக்கிழமை முதல் (மே 28) துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழையக் கூடாது என ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் கண்ணூா் பிரிவு வீரா்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா்.
மே 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவா்.
எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரேனும் நுழைய வேண்டாம். மேய்ச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். மனித நடமாட்டமோ, கால்நடைகள் செல்வதோ அனுமதிக்க முடியாது. சுற்றுப் பகுதி மக்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

மணப்பாறை, புத்தாநத்தத்தில் இன்று மின் நிறுத்தம்

ஈரான் டிவி நிகழ்ச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

