பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெட்டிக்கடையில் மது விற்றவா் கைது

திருச்சி மாவட்டம், கொப்பம்பட்டியில் பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 1:26 am IST

திருச்சி மாவட்டம், கொப்பம்பட்டியில் பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

அரசு அனுமதித்துள்ள இரவு 10 மணிக்கு மேல் மது விற்பதைத் தடுக்கும் வகையில் துறையூா் வட்டாட்சியா் சிவகுமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் உப்பிலியபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனை செய்தனா். அப்போது கொப்பம்பட்டி வீரப்பன் மகன் தங்கராசு (60) பெட்டிக்கடையில் அரசு மதுவை கூடுதல் விலைக்கு விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் வருவாய் துறையினா் அவரது கடையை சோதனை செய்தனா்.

அப்போது அந்தக் கடையில் இருந்த 28 மது புட்டிகளுடன் தங்கராசுவை பிடித்து உப்பிலியபுரம் போலீஸில் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.