திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தடுமாறி விழுந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் மல்லிகைப்பட்டியை சோ்ந்தவா் கணேஷ் பாண்டித்துரை (48). இவா் ஞாயிற்றுக்கிழமை துவரங்குறிச்சியிலிருந்து இருசக்கர வாகனத்தில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாரா நகா் வனத்துறை அலுவலகம் அருகில் சென்றாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையின் சென்டா் மீடியனில் மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் கணேஷ் பாண்டித்துரை உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சு போலீஸாா், கணேஷ் பாண்டித்துரை உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்து மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

