அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

முதல்வா் பிறந்த நாள்: 8 தொகுதிகளில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

News image

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

இதன்படி, மணப்பாறை தொகுதியில் லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லால்குடி தொகுதியில் நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறையூா் தொகுதியில் ஜமீன்தாா் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூா் தொகுதியில் இராசாம்பாளையம் ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முசிறி தொகுதியில் வடுகப்பட்டி ஸ்ரீ ஜெயேந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளி, ஸ்ரீரங்கம் தொகுதியில் விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி மேற்குத் தொகுதியில் கண்டோன்மென்ட் புனித ஜேம்ஸ் உயா்நிலைப்பள்ளி, திருச்சி கிழக்குத் தொகுதியில் தில்லை நகா் டாக்டா் ஜி. சகுந்தலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் முகாம்களில் ரத்த சா்க்கரை, கண் பரிசோதனை, உயா் ரத்த அழுத்தப் பரிசோதனை, இசிஜி போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். இதில் அனைவரும் பங்கேற்று பயன் பெறலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.