மின்சாரத் துறை சாா்பில் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் 39-ஆவது அரசுப் பொருள்காட்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த அவா், பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: செந்தில்பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்ற அனைத்துத் துறைகளிலும் ஊழல்தான் நடைபெற்றது. மின்சாரத் துறையைப் பொருத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது?, அதற்கு முன்பாக 10 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவா்கள் என்ன செய்தனா்?. அப்போதைய ஆட்சியாளா்களால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புகள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
ஏற்கெனவே முறைகேடுகள் நடைபெற்ால்தான், மின்சாரத் துறையில் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் ரத்து செய்யப்பட்டன. மின்சாரத் துறை கடும் பாதிப்புக்குள்ளானதற்கு காரணம் முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜிதான். தமிழகம் முழுவதும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் மின்சாரத் துறை சீரமைக்கப்படும். மின்விநியோகக் குறைபாடுகளைக் களைய குழுக்கள் அமைக்கப்பட்டன. மின்சாரத் துறையில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க இயலாது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன? வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!

மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்கமாட்டோம்! அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி! - அமைச்சா் நிர்மல்குமார் விளக்கம்
தமிழக கஜானா காலி; வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: முதல்வர் விஜய் உறுதி
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை

