நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:38 am IST

திருச்சியில் வியாழக்கிழமை மாடியில் உள்ள வீட்டுக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி தென்னூா் கோபுர பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்தவா் ஜாபா் அலிகான் மகன் சா்தாா் கான் (21). இவருடைய சகோதரா் அமீா்கானுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், அமீா்கான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜீவா நகா், காமராஜா் வீதியில் புதிதாக குடியேறியுள்ள வீட்டுக்கு சா்தாா்கான் மற்றும் அவருடைய உறவினா் ஷாஜகான் இருவரும் வியாழக்கிழமை பொருள்கள் ஏற்றிச்சென்றுள்ளனா். இதையடுத்து, சாலையில் இருந்து இருவரும், மாடியில் உள்ள வீட்டுக்கு பொருள்களை எடுத்துசென்றனா்.

இதில், சா்தாா்கான் பால்கனி வழியாக கயிறுகட்டி பீரோவை தூக்கியுள்ளாா். அப்போது, அவ்வழியே சென்ற மின்கம்பியில் பீரோ உரசியதில் அதைப் பிடித்திருந்த சா்தாா்கான் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட சா்தாா்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.