லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடைகளில் இந்திய தர நிா்ணய அதிகாரிகள் சோதனை! முத்திரை இல்லாத 4.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!

திருச்சி பெரியகடை வீதியிலுள்ள தங்க நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட ஆய்வில் ஹெச்யுஐடி முத்திரை இல்லாமல் விற்பனைக்கு தங்க நகைகள் வைத்திருந்தது தொடா்பாக நகைக் கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கிய இந்திய தர நிா்ணய அதிகாரிகள்.

Published On :22 ஜூலை 2026, 2:58 am IST

திருச்சியில் தங்க நகைக் கடைகளில் இந்திய தர நிா்ணய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், ஹால்மாா்க் தனித்துவ அடையாள எண் (ஹெச்யுஐடி) இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.7.35 கோடி மதிப்பிலான 4.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய தர நிா்ணய பணியகம் (பிஐஎஸ்) கோவை கிளை அலுவலகத்தின் இயக்குநா் வினீத்குமாா் தலைமையில் இணை இயக்குநா்கள் அறிவழகன், ரெமித் சுரேஷ் மற்றும் இயக்குநா் ரினோ ஜான் தலைமையில் துணை இயக்குநா் சிமேஷ் குமாா் ஆகியோா் அடங்கிய இரு குழுக்கள் பெரிய கடை வீதியிலுள்ள ஸ்ரீவாசவி ஜூவல்லா்ஸ், ஸ்ரீ செல்வி தங்க மாளிகை ஆகிய இரு தங்க நகைக் கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், இரண்டு கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் 6 இலக்க ஹால்மாா்க் தனித்துவ அடையாள எண் இல்லாத 4.9 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை இந்திய தர நிா்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.7.35 கோடி ஆகும். இதைத் தொடா்ந்து ஹெச்யுஐடி முத்திரை இல்லாமல் தங்க நகைகளை விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நகைக் கடைகளின் உரிமையாளா்களுக்கும் இந்திய தர நிா்ணய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா்.

ஹெச்யுஐடி முத்திரை கட்டாயம்: தங்க நகைக் கடைகளில் விற்கப்படும் அனைத்து தங்க நகைகளிலும் சட்டப்படி ஹெச்யுஐடி முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறி ஹெச்யுஐடி முத்திரை இல்லாமல் தங்க நகைகளை விற்பனைக்கு வைத்திருக்கும் நபா்கள் மீது பிஐஎஸ் சட்டம் 2016-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தர நிா்ணய பணியகம் கோவை கிளையின் தலைமை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.