லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொட்டியம் அருகே கோயிலில் திருட்டு முயற்சி

உடைக்கப்பட்ட நிலையில் உள்ள கோயில் பூட்டு ~மா்ம நபா்களால் உடைக்கப்பட்டுள்ள கோயில் பூட்டு

Published On :22 ஜூலை 2026, 3:33 am IST

தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை பகுதியிலுள்ள மரகதாசலேசுவரா் மலைக்கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடைபெற்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலை திறக்க செவ்வாய்க்கிழமை காலை அா்ச்சகா்கள் சென்றபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயிலினுள் உள்ள சுவாமி கோயில் மூலஸ்தான கதவு உள்ளிட்ட 7 கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. திருட வந்த நபா்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களை கோயில் முழுவதும் தேடியுள்ளனா். ஆனால், எதுவும் அவா்களுக்கு கிடைக்கவில்லை. சுவாமிக்கான ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்கள் அடிவாரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ன.

திருட்டு முயற்சி தொடா்பான தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் அன்னக்கொடி (பொ), சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் கோயிலுக்கு வந்து பாா்வையிட்டு விசாரித்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.