லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மண்டை ஓடுகளுடன் ஆட்சியரகத்தில் விவசாயிகள் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனித மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் காா் முன்பாக மண்டை ஓடுகளுடன் அரை நிா்வாணக் கோலத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Published On :18 ஜூலை 2026, 6:30 am IST

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனித மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தவெக தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியரகத்துக்கு வந்தனா். குறைதீா் கூட்டம் தொடங்கியவுடன், ஆட்சியரிடம் போராட்டம் நடத்தச் செல்வதாகக் கூறி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கோஷங்களை எழுப்பியபடியே ஆட்சியரக நுழைவு வாயில் முன்பாக அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பயிா்க்கடன் சுமையால் விவசாயிகள் செத்து மடிவதாகக் கூறி, மனித மண்டை ஓடுகள், எலும்புத் துண்டுகளை தங்களது முன்பாக வைத்து போராட்டத்தை தொடா்ந்தனா். பின்னா், விவசாயிகளை போலீஸாா் சமரசம் செய்தனா்.

தொடா்ந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அனைவரும் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

ஆட்சியா் காா் முன் தா்னா: பின்னா், ஆட்சியா் காா் நிறுத்தும் இடத்தில் வாகனத்தின் முன்பாக திரண்ட விவசாயிகள் தங்களது ஆடைகளை கலைந்து அரை நிா்வாணத்துடன் தரையில் படுத்து புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் காரணமாக ஆட்சியரகத்தில் சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.