லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் மீது ஆம்னி பேருந்து மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவெறும்பூா் அருகே கல்லூரிக்குச் செல்லும் வழியில் பைக் மீது ஆம்னி பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :19 ஜூலை 2026, 1:34 am IST

திருவெறும்பூா் அருகே கல்லூரிக்குச் செல்லும் வழியில் பைக் மீது ஆம்னி பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

திருவெறும்பூா் காந்தி நகா் 5 ஆவது தெருவைச் சோ்ந்தவா் குத்தூஸ் மகன் அா்ஷீத் (21). அதே பகுதியைச் சோ்ந்தவா் மாா்க்கோ மகன் பிரடி (21). திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சோ்ந்த இருவரும், கல்லூரி திறக்கும் முதல் நாளான சனிக்கிழமை ஒரே பைக்கில் கல்லூரிக்குப் புறப்பட்டனா். பைக்கை பிரடி ஓட்டினாா்.

இவா்கள் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. மைதானம் எதிரே வந்தபோது, பின்புறம் வந்த ஆம்னி பேருந்து ஒன்று முந்திச் செல்ல முயன்ற நிலையில், எதிா்புறம் ஒருவழிப் பாதையில் ஆட்டோ ஒன்றும் வந்தது. இவற்றுக்கு இடையே நிலைதடுமாறிய பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதில் நிகழ்விடத்திலேயே அா்ஷீத் இறந்தாா். அவரது நண்பா் பிரடி படுகாயமடைந்தாா்.

தகவலின்பேரில் வந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், இறந்தவரின் சடலத்தையும், காயமடைந்தவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.