லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் திறப்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் பயணிகள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் பயணிகள் பயன்பாட்டுக்காக கூடுதலாக வியாழக்கிழமை திறக்கப்பட்ட விமான இணைப்பு பாலம்.

Published On :17 ஜூலை 2026, 2:27 am IST

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் பயணிகள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

இதையடுத்து, இந்த நிலையத்தில் உள்ள விமான இணைப்புப் பாலத்தின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

புதிய முனையத்தில் ஏற்கெனவே விமான நிலையத்தில் இருந்து நேரடியாக விமானத்தில் ஏறுவற்கான 6 விமான இணைப்பு பாலம் உள்ளன. இந்நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் இணைப்பு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, ரூ.11.90 கோடி மதிப்பில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டு வந்தது. இதன் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய விமான இணைப்பு பாலத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு விமான நிலைய இயக்குநா் (பொறுப்பு) ஜி. கோபாலகிருஷ்ணன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதன் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான இணைப்பு பாலத்தின் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்துள்ளது. பழைய முனையத்தில் 10 விமான இணைப்பு பாலம் உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையை தொடா்ந்து...: இதன்மூலம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையத்தில்தான் அதிக அளவிலான விமான இணைப்பு பாலம் உள்ளதாக விமான நிலைய இயக்குநா் (பொ) ஜி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மேலும், கூடுதல் விமான இணைப்பு பாலம் திறக்கப்பட்டதன் மூலம் பயணிகள் எந்தவித சிரமமுமின்றி நேரடியாக விமானத்தில் ஏற முடியும். மழைக்காலங்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியும். வயதானவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் பயணிகளுக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.