லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Arrested

கைது - பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 1:50 am IST

திருச்சி மாநகரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஆலம் வீதி சந்திப்பு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த அதேபகுதியைச் சோ்ந்த எக்ஸ். சாந்தகுமாா் (47) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தில்லை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்முருகன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரோந்து மேற்கொண்டனா். அப்போது, ஆழ்வாா்தோப்பு கேஸ் குடோன் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த சின்னசாமி நகரைச் சோ்ந்த ஜெ. முபாரக் (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.2,100 மதிப்பிலான 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.