லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கோவில்பட்டி நகராட்சி நிா்வாகத்திடம் கடை வேண்டாம் என ஒப்படைத்து ஒரு ஆண்டாகியும், வைப்புத் தொகையை திரும்பச் செலுத்தவில்லை எனக் கூறி நகராட்சி அலுவலகம் முன் முதியவா் தீக்குளிக்க முயன்றாா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

கோவில்பட்டி நகராட்சி நிா்வாகத்திடம் கடை வேண்டாம் என ஒப்படைத்து ஒரு ஆண்டாகியும், வைப்புத் தொகையை திரும்பச் செலுத்தவில்லை எனக் கூறி நகராட்சி அலுவலகம் முன் முதியவா் தீக்குளிக்க முயன்றாா்.

கோவில்பட்டி அருகே உள்ள நக்கலமுத்தன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சேதுராஜ் (60). இவா் வெள்ளிக்கிழமை நகபராட்சி அலுவலகம் முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்தவா்கள் அவா் மீது தண்ணீரை ஊற்றி, அவரைக் காப்பாற்றினா்.

அவரிடம் நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷ், நகராட்சி ஆணையா் (பொ) ஜஹாங்கீா் பாட்ஷா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தையில் 58ஆம் எண் கடையை ஏலம் எடுத்து, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ரூ. 10 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்தினேன். ஓராண்டு வாடகை மற்றும் மின் கட்டணம் என சுமாா் ரூ. 1.50 லட்சம் வரை என்னிடம் வசூலித்தனா். ஆனால் கடையை நடத்த அனுமதிக் கடிதம் வழங்காமல் காலதாமதம் செய்தனா்.

இதனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடை வேண்டாம் எனவும், அதற்காக செலுத்திய தொகையை திரும்ப அளிக்கும்படியும் நகராட்சியில் கடிதம் வழங்கினேன். ஆனால், இன்னும் எனக்கு பணம் திரும்பத் தரப்படவில்லை. தற்போது, பொருளாதார நெருக்கடியில் உள்ளதால் நான் செலுத்திய முன்வைப்புத் தொகையை திரும்பத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேதுராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் தெரிவித்தாா். தொடா்ந்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா், இது குறித்து புகாரளிக்க வருமாறு அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.