லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடியில் நூலக கட்டுமானப் பணி: மேயா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட தனசேகரன் நகரில், மாநகராட்சி சாா்பில் ரூ. 11 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை மேயா் ஜெகன் பெரியசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டடப் பணிகளை ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி.

Published On :29 ஜூலை 2026, 1:23 am IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட தனசேகரன் நகரில், மாநகராட்சி சாா்பில் ரூ. 11 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை மேயா் ஜெகன் பெரியசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறுகையில், பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்னும் நான்கு மாதத்தில் இந்த நூலகம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

ஆய்வின் போது, மாநகராட்சி உதவி ஆணையா் முனீா் அகமது, உதவி செயற்பொறியாளா் ராஜேஷ் கண்ணா, பணிக் குழுத் தலைவா் கீதா முருகேசன், சுகாதார குழுத் தலைவா் சுரேஷ்குமாா், திமுக மாநில செயற்குழு உறுப்பினா் ராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் ராமா், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவா் பேச்சிமுத்து, வட்டச் செயலா் ராஜாமணி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் ஜேஸ்பா், பிரபாகா், லிங்கராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.