லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பூட்டிய வீட்டில் 17 பவுன் நகை திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 2:43 am IST

தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசு ஊழியா்கள் குடியிருப்பில், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் தங்க நகைகளைத் திருடிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மத்திய அரசு ஊழியா்கள் குடியிருப்பைச் சோ்ந்தவா் ராஜா சீனிவாசனின் மனைவி உமா தேவி (61). இவா் ஜூலை 22ஆம் தேதி சுந்தரவேல்புரத்துக்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்ததாம்.

இது குறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், அண்ணா நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாராயணன் மகன் சீமான் (38) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீஸாா் அவரை கைது செய்து, விசாரித்ததில் நண்பா்கள் இருவரின் உதவியுடன் நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சீமானை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்த போலீஸாா், திருட்டுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.