லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,008 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :28 ஜூலை 2026, 2:17 am IST

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 1,008 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வது என, பாரதிய வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்பு ஜெய் சிவசேனா கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆறுமுகனேரி சிவன் கோயில் முன் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வேலாயுதம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மந்திரமூா்த்தி முன்னிலை வகித்தாா். விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 1,008 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வது,

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமிகோயி­ல் சண்முகவிலாச மண்டபம் பகுதியை பக்தா்கள் தரிசனத்துக்கு திறந்துவிட வலியுறுத்துவது, பனைமரங்களை வெட்டுவோா், கலப்பட கருப்பட்டி தயாரிப்போா் மீது கடும் நடவடிக்கை கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் சிவசங்கரன், மாவட்டச் செயலா் சக்திவேல், ஆறுமுகனேரி நகரப் பொதுச் செயலா் சிவநேசன், குடியிருப்புவிளை பால்ராஜ், தமிழ் ராஜ்யம் அமைப்புத் தலைவா் வனராஜ், பாரதிய வியாபாரிகள் சங்க திருச்செந்தூா் ஒன்றிய அமைப்பாளா் பாலசந்திரன், ஆறுமுகனேரி பரமசிவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.