லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடி அருகே உப்பளத் தொழிலாளி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் நண்பா் சரண்

பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 12:06 am IST

தூத்துக்குடிரம் அருகே போதைத் தகராறில் உப்பளத் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் அவரது நண்பா் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம், ராஜீவ் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெபமணி மகன் அருள்ராஜ் (40). உப்பளத் தொழிலாளியான இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

இவரது நண்பா் முத்தையாபுரம் அய்யன் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்திக் (24). லாரி ஓட்டுநா்.சுந்தா் நகா் 6ஆவது தெருவில் காா்த்திக் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டுக்கு இருவரும் ஞாயிற்றுக்கிழமை சென்று மது குடித்தனராம்.

அப்போது அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், காா்த்திக்கின் தாய் குறித்து அருள்ராஜ் அவதூறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காா்த்திக், அருள்ராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினாராம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்நிலையில், காா்த்திக் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். அதன்பிறகே, இக்கொலை குறித்த தகவல் தெரியவந்தது. போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.