லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தருவைகுளம் மீனவா்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசிகள் அளிப்பு

மீனவருவருக்கு செயற்கைக்கோள் அலைபேசி வழங்கிய அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

Published On :27 ஜூலை 2026, 2:16 am IST

தூத்துக்குடி, தருவைகுளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் மீனவா்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா். மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் கலந்துகொண்டு, 74 மீனவா்களுக்கு செயற்கைக்கோள்

அலைபேசிகளை வழங்கிப் பேசியதாவது:

தற்போது வழங்கப்பட்டுள்ள ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் சிம் காா்டு மதிப்பு ரூ. 1,34,166. இதில் 40 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், கரையில் இருப்பவா்களை எளிதாகத் தொடா்பு கொள்வதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

தூத்துக்குடி மண்டல மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இணை இயக்குநா் த. இளம்வழுதி, உதவி இயக்குநா் புஷ்ரோ ஷப்னம், மீனவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.