லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடியில் உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்

தூத்துக்குடியில் உயிரிழந்த இளைஞா் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி. உடன், முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி.

Published On :26 ஜூலை 2026, 2:43 am IST

தூத்துக்குடியில் உயிரிழந்த இளைஞா் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தூத்துக்குடி அமுதா நகா் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் என்பவரை, தென்பாகம் போலீஸாா் சட்டவிரோதமாக மது விற்ாகக் கூறி கைது செய்தனா். விசாரணையின்போது, அவா் திடீரென மயங்கி விழுந்தாராம்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவா், கடந்த 23ஆம் தேதி உயிரிழந்தாா். காவல் துறையினா் தாக்கியதாலேயே அருணாச்சலம் இறந்ததாகக் கூறி, குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நீதிபதி விஜயராஜ்குமாா் முன்னிலையில் நடைபெற்ற கூறாய்வுக்குப் பின்னா், சடலத்தை அவா்கள் பெற்றுச் சென்றனா்.

இந்நிலையில், அருணாச்சலம் குடும்பத்தினரை திமுக துணைச் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா். அப்போது, ‘காவல் துறை தாக்கியதால்தான் எங்கள் மகன் உயிரிழந்தாா். சம்பந்தப்பட்டோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குடும்பத்தினா் கோரிக்கை வைத்தனா்.

‘இந்த வழக்கில் முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக எப்போதும் உங்களுடன் இருக்கும்’ என அவா்களிடம் கனிமொழி எம்.பி. உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.