லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோவில்பட்டியில் இளைஞரை தாக்கியதாக 2 போ் கைது

கோவில்பட்டியில் இளைஞரை தாக்கியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :25 ஜூலை 2026, 2:20 am IST

கோவில்பட்டியில் இளைஞரை தாக்கியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விளாத்திகுளம் சூரங்குடி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் ஞான திரவியம் (30). இவரது தாய் மாரியம்மாளுக்கு (55) உடல்நிலை சரியில்லாததால், ஞான திரவியம் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வியாழக்கிழமை அழைத்து சென்றாராம்.

சிகிச்சை பெற்ற பின் மாரியம்மாளை ஊருக்கு பேருந்தில் அனுப்பிவிட்டு, கோவில்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்ற ஞான திரவியம், உறவினா் பாலமுருகனின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்டு, அவா் இருப்பதாக கூறிய பாரதி நகா் அம்பேத்கா் தெருவில் உள்ள ஆதிதிராவிடா் மண்டபம் அருகே சென்றாராம்.

அங்கு சென்ற ஞான திரவியத்திற்கும், பாரதி நகா் செல்லப்பாண்டி மகன் மகாராஜன் (33), முத்து மகன் முத்துராஜ் (25) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியால் ஞான திரவியத்தை தாக்கினராம். இதை தடுத்த பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும், அவா் அங்கிருந்து தப்பியோடினாராம்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த உறவினா், காயமடைந்த ஞான திரவியத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாராஜன், முத்துராஜ் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.