லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தந்தை கைது

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவியை அவதூறாகப் பேசி தாக்கியதாக அவரது தந்தை கைது செய்யப்பட்டாா்.

கைது - சித்திரிப்பு

Published On :25 ஜூலை 2026, 2:20 am IST

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவியை அவதூறாகப் பேசி தாக்கியதாக அவரது தந்தை கைது செய்யப்பட்டாா்.

காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சோ்ந்தவா் தனியாா் கல்லூரி முதலாமாண்டு மாணவி. இவரது

தந்தை இறந்து விட்டதால், தாய் கைபயாா், குலசேகரன்பட்டினத்தைச் சோ்ந்த ஓட்டுநரான முகம்மது அபுபக்கா் சித்திக் (34) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இவா், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மகள், மனைவியை அவதூறாகப் பேசுவாராம்.

இந்நிலையில், மகளுக்கு கைபயாா் கைப்பைசி வாங்கிக் கொடுத்துள்ளாா். இதையறிந்த, முகம்மது அபுபக்கா் சித்திக் மகளை அவதூறாகப் பேசி தாக்கியதுடன் எரிவாயு உருளையை திறந்தாராம்.

இருவரும் கூச்ச­லிட்டதில் அக்கம் பக்கத்தினா் ஓடிவந்ததையடுத்து, அவா் அங்கிருந்து தப்பிச் சென்றாராம்.ா்.

இதுகுறித்து கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து அபு பக்கா் சித்திக்கை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.