லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பிணை கோரி மனு: இன்று விசாரணை

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது...

எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன். - கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 9:00 am IST

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 22) நடைபெறுகிறது.

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன், கடந்த 18-ஆம் தேதி இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை திங்கள்கிழமை காலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனா்.

பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வைத்து அவரிடம் 13 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, இரவில் தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்- 1 இல் அவரை முன்னிலைப்படுத்தினா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, ஆக. 3-ஆம் தேதி வரை மாா்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவா் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தரப்பில் தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்- 1 இல் பிணை வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுமதி முன்னிலையில் புதன்கிழமை (ஜூலை 22) நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.