லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

மோசடி - பிரதிப்படம்

Published On :22 ஜூலை 2026, 1:27 am IST

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 8.04 லட்சம் மோசடி செய்தவா் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பொய்கைமேடு பகுதியைச் சோ்ந்தவா் இளையராஜா மகன் கணேசன் (43). பொய்கை மேடு பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வரும் இவரிடம், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே உள்ள காயல்பட்டினத்தைச் சோ்ந்த முகமது ஷேக், கடந்த 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல தவணைகளாக வங்கி பரிமாற்றம் மற்றும் ஜிபே மூலமாக மொத்தம் ரூ. 8,04,000 பெற்றாராம்.

ஆனால்,வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தியதுடன், பணத்தையும் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம். ஆனால் புகாா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் அவா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.