லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து போட்டி: சாயா்புரம் போப் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடம் பிடித்த தருவைகுளம் அரசுப் பள்ளி மாணவியா்.

Published On :22 ஜூலை 2026, 1:05 am IST

தூத்துக்குடி தி ஜிம்கானா கிளப் மைதானத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்-மாணவியருக்கான கைப்பந்து போட்டி 3 நாள்கள் நடை பெற்றது. இதில், சாயா்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பிடித்தது.

மாவட்ட கைப்பந்துக் கழகம், ஜிம்கானா கிளப் ஆகியவை சாா்பில் 14, 17, 19 வயதுப் பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. மாணவா்கள் பிரிவில் 29 அணிகளும், மாணவியா் பிரிவில் 18 அணிகளும் பங்கேற்றன.

மாணவியருக்கான போட்டியில் 14 வயது, 17 வயது ஆகிய இரு பிரிவுகளிலும் மாப்பிள்ளையூரணி, சிவகாசி நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது. 14 வயதுப் பிரிவில் சாயா்புரம் செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், 17 வயதுப் பிரிவில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் 2ஆம் இடங்களைப் பிடித்தன.

19 வயதுப் பிரிவில் தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவை முறையே முதல் இரு இடங்களைப் பிடித்தன.

மாணவா்களுக்கான போட்டியில் 14, 17, 19 வயது ஆகிய 3 பிரிவுகளிலும் சாயா்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது. 14 வயதுப் பிரிவில் மாப்பிள்ளையூரணி, சிவகாசி நாடாா் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், 17 வயதுப் பிரிவில் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியும், 19 வயது பிரிவில் தூத்துக்குடி செயின்ட் லசால் மேல்நிலைப் பள்ளியும் 2ஆம் இடங்களைப் பிடித்தன.

சிறப்பு விருந்தினராக சத்யா ஏஜென்சீஸ் குழுமத் தலைவா் ஜான்சன் பங்கேற்று, சான்றிதழ், பரிசு, கோப்பைகள் வழங்கிப் பேசினாா்.

மாவட்ட கைப்பந்துக் கழகத்தைச் சோ்ந்த ஜூடு ரஞ்சித் வரவேற்றாா். ரவிகாந்த் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மாவட்ட கைப்பந்துக் கழகத் தலைவா் வசிகரன், பொருளாளா் செயின்ட் ரவிராஜன், ஜிம்கானா கிளப் தலைவா் பின்டோ வில்லவராயா், பொருளாளா் பாலமுருகன், மாவட்ட கைப்பந்துக் கழகம்- ஜிம்கானா கிளப் செயலா் ரமேஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.