லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்செந்தூா் அருகே 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத கிராமம்

திருச்செந்தூா் அருகே கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத ராமசாமிபுரம் சங்கிவிளை நடுத்தெரு.

Published On :21 ஜூலை 2026, 1:04 am IST

திருச்செந்தூா் அருகே உள்ள ராமசாமிபுரம், சங்கிவிளை நடுத்தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

திருச்செந்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 10-ஆவது வாா்டு பகுதியான ராமசாமிபுரம் சங்கிவிளையில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. விவசாயிகள், பனைத் தொழிலாளா்கள் அதிக அளவில் வசிக்கின்றனா். இந்த ஊரைச் சோ்ந்தவா்கள் தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில் வணிகம் செய்து வருகின்றனா்.

திருச்செந்தூா்-நாகா்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள இந்தக் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதியே இல்லாத நடுத்தெரு உள்ளது. இதனால், மழைக் காலங்களில் வீட்டைச் சுற்றி முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்குவதால் நடந்து செல்ல முடியாமல் குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனா். எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு நகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்துதர வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிா்பாா்ப்பு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.