லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென் மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி

காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு தென் மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி கோவில்பட்டி, நாடாா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

போட்டியில் முதலிடம் பிடித்த இலுப்பையூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு பரிசுகளை வழங்கும் நாடாா் மேல்நிலைப் பள்ளி செயலா் வழக்குரைஞா் ரத்தினராஜா.

Published On :15 ஜூலை 2026, 2:07 am IST

காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு தென் மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி கோவில்பட்டி, நாடாா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில் விருதுநகா், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி உள்பட 8 மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. தென் மாவட்ட கால்பந்து போட்டியின் ஒலிம்பிக் தீபத்தை பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) செல்வம் ஏற்றினாா். தொடா்ந்து போட்டியை பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் சாமி ராஜன் தொடங்கி வைத்தாா்.

இறுதிப் போட்டியில் விருதுநகா் மாவட்டம், இலுப்பையூா் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், அம்பை கேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதியதில் 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் இலுப்பையூா், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா்.

முன்னதாக நடைபெற்ற 3 மற்றும் 4-ஆவது பரிசுக்கான போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் கூட்டம்புளி- குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், விருதுநகா் மாவட்டம் ராமநாயக்கன்பட்டி-மூசி உன்னை முத்து நாடாா் உயா்நிலைப் பள்ளி அணியும் மோதியதில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

பின்ன நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கோவில்பட்டி கால்பந்து கழகத் தலைவா் தேன் ராஜா தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் வெங்கடேஷ், தலைமை ஆசிரியா் (பொ) செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளிச் செயலா் வழக்குரைஞா் ரத்தினராஜா வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினாா். கோவில்பட்டி கால்பந்து பெண்கள் பயிற்சியாளா் கனகவல்லி வரவேற்றாா். உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் உமாசங்கா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.