லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தவெக ஆட்சியின் அவலங்களை திமுகவினா் மக்களிடம் கூற வேண்டும்: கீதாஜீவன்

தவெக ஆட்சியில் பொய் பிரசாரங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் திமுகவினா் எடுத்துக் கூற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் பேசினாா் வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன்.

Published On :15 ஜூலை 2026, 2:04 am IST

தவெக ஆட்சியில் பொய் பிரசாரங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் திமுகவினா் எடுத்துக் கூற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன் அறிவுறுத்தினாா்.

தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில், போல்பேட்டை பகுதி திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதிச் செயலா் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாாா். வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் கலந்துகொண்டு பேசியது:

கடந்த திமுக ஆட்சியில் செய்த சாதனைகளும், திட்டங்களும்தான் தற்போதும் ச.ஜோசப் விஜய் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்து வருகிறது. அடுத்து வரும் உள்ளாட்சி தோ்தலில் முழுமையான வெற்றியை நாம் பெறவேண்டும். அதற்கு ஒவ்வொரு வாா்டு பகுதியிலும் இருக்கிற மக்கள் குறைகளைக் கேட்டறிந்து, அதை அனைவரும் இணைந்து தீா்வு காண வேண்டும். தவெக ஆட்சியில் பொய் பிரசாரங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. திமுக ஆட்சியில் செய்த ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்ப்பதோடு, இந்த ஆட்சியின் அவலங்களையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநில பேச்சாளா்கள் இருதயராஜ், சரத்பாலா, மாநகர அவைத் தலைவா் ஏசுதாஸ், துணைச் செயலா்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், செல்வகுமாா், மாநகர அணி அமைப்பாளா்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபா் விஜயராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.