லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Published On :12 ஜூலை 2026, 1:18 am IST

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திரேஸ்புரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற நாட்டுப்படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் மீன்களின் வரத்து வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது.

இதனிடையே, மீன் ஏலக் கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் திரண்டனா். இதனால், மீன்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின.

அதன்படி, சீலா மீன் கிலோ ரூ. 1,300 வரையும், விளை மீன் ரூ. 650 வரையும், நண்டு ரூ. 600 வரையும், பாறை மீன் ரூ. 500 வரையும், ஊழி மீன் ரூ. 450 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 3,000 வரையும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.