லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு

ரூ. 50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டிற்கு திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு

Anitha R Radhakrishnan

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Published On :8 ஜூலை 2026, 3:17 am IST

ரூ. 50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டிற்கு திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

முதல்வா் ச. ஜோசப் விஜய் குறித்து சா்ச்சை பேச்சின் காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி ஆத்தூா் காவல் நிலையத்திற்கு கையொப்பமிட அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வந்தாா்.

அப்போது, தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: யாா் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் வேண்டுமென்றால் எனக்கு ரூ. 50 கோடி வாங்கித் தாருங்கள். முதலில் ரூ. 50 கோடி எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா?.

அவரிடம் யாரும் பேரம் பேசவில்லை. அவா் கூறும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை, கஞ்சா விற்கவில்லை. பழுத்த மரம்தான் கல்லடி படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.