லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இலங்கைக்குக் கடத்த முயன்ற 400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ பீடி இலைகளை வடபாகம் காவல் நிலைய போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பீடி இலைகள் - பிரதிப் படம்

Published On :8 ஜூலை 2026, 12:39 am IST

தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ பீடி இலைகளை வடபாகம் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக வடபாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வடபாகம் காவல் ஆய்வாளா் வேல்ராஜ் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று, கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 மூட்டைகளைக் கண்டறிந்தனா்.

அந்த மூட்டைகளைச் சோதனை செய்தபோது, அவற்றில் மொத்தம் 400 கிலோ பீடி இலைகள் இருந்தது உறுதிசெய்யப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.