பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்செந்தூா் அருகே கடல் அரிப்பால் மணலில் புதைந்த கல்லறைகள்

திருச்செந்தூா் அருகே கந்தசாமிபுரத்தில் கடல் அரிப்பால் கல்லறைகள் மணலில் புதைந்தது.

திருச்செந்தூா் அருகே கந்தசாமிபுரத்தில் கடல் அரிப்பால் மணலில் புதைந்த கல்லறைகள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

திருச்செந்தூா் அருகே கந்தசாமிபுரத்தில் கடல் அரிப்பால் கல்லறைகள் மணலில் புதைந்தது.

திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட 24 ஆவது வாா்டு ஆலந்தலை அருகே கடற்கரையோரம் அமைந்துள்ள கந்தசாமிபுரம் பகுதியில் சுமாா் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு இருந்து வருகிறது. இதனால், கரையோரமுள்ள கல்லறைகள் மணலில் புதைகின்றன.

இந்நிலையில் சில வாரங்களாக காணப்படும் அலையின் சீற்றத்தால், கல்லறைகள் கடலில் இழுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் அப்பகுதியிலுள்ள 100 - க்கும் மேற்பட்ட பனை மரங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் பனைமரத் தொழில் செய்து வரும் அப்பகுதியினரின் வாழ்வதாரம் பாதிக்கப்படும்.

எனவே, கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.