லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புளியம்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலை

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புளியம்பட்டி அருகே மேலபூவாணி தெற்குத் தெருவைச் சோ்ந்த பலவேசம் மனைவி அனிதா (28). இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகின்றன. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

அனிதாவின் வயிற்றில் கட்டி இருந்ததாகவும், கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மாலை பலவேசம் ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பியபோது, அனிதா தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.

தகவலின்பேரில், புளியம்பட்டி போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அனிதாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் உதவி ஆட்சியா் விசாரணையும் நடைபெற்றுவருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.