லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாசரேத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை

தற்கொலை... - கோப்புப்படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 3:55 am IST

நாசரேத்தில் குடும்ப தகராறில் பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாசரேத் சாமுவேல் தெருவைச் சோ்ந்த ஞான செல்வின் மனைவி அந்தோணி கேத்தரின் (57). இவா்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனா். இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளனா்.

இந்நிலையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரச்னை இருந்து வந்துள்ளது. இதேபோல் திங்கள் கிழமையும் பிரச்னை எழுந்துள்ளது. இதில், மனமுடைந்த அந்தோணி கேத்தரின் திங்கள்கிழமை கணவா் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புகாரின்பேரில், நாசரேத் உதவி ஆய்வாளா் முரளி சம்பவ இடத்துக்குசென்று அந்தோணி கேத்தரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.