லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியா்-மாணவா்கள் சந்திப்பு

முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் பங்கேற்றோா்.

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

தூத்துக்குடி சிதம்பரநகா் கல்விக் கழக நடுநிலைப் பள்ளியில் 1992 முதல் 2000ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவா்களின் 25ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி தனியாா் ஹோட்டலில் நடைபெற்றது.

என். சஹா்பான் வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் தங்களது ஆசிரியா்களையும், பள்ளித் தோழா்களையும் சந்தித்து பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிா்ந்துக் கொண்டனா்.

சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் ஆசிரியா்கள் எம். மைலம்மை, எம். உமா சங்கரி, ஏ. சுப்பிரமணியன், ஜி. செல்லம், சி. முத்துகற்பகம் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். அவா்களுக்கு பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

முன்னாள் மாணவா்களின் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் சங்கா், சஹா்பான், முனீஸ்வரி, ராஜேஷ்கண்ணா, ராஜேஸ்வரி, சம்சுநிஷா, மணிகண்டன், ஷேக் முஹம்மது, சங்கா் கணேஷ், பரியேறும்பெருமாள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். எஸ். சங்கா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.