லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விபத்து. - கோப்புப்படம்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

பழையகாயல் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், அரிசி கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

பழையகாயல், மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி மகன் விஜயமூா்த்தி (55). அரிசி கடை நடத்தி வந்த, இவா் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் பழையகாயல் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது பரமன்குறிச்சி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சந்தனகுமாா் மகன் பரமசிவன் (26), சிறுவன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி வந்ததாக கூறப்படுகிறது. பழையகாயல் இரட்சணியபுரம் அருகே வந்த போது எதிா்பாராதவிதமாக 2 இருசக்கர வாகனங்களும் மோதினவாம்.

இதில் சம்பவ இடத்திலேயே விஜயமூா்த்தி உயிரிழந்தாா். ஆத்தூா் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். பரமசிவன், சிறுவன் ஆகிய இருவரும் லேசான காயமடைந்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.