லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குமரி கலைக் குழு ஒருங்கிணைப்பாளா் தூத்துக்குடியில் உயிரிழப்பு

உயிரிழப்பு...

Published On :17 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

தூத்துக்குடி நெய்தல் திருவிழாவில் பங்கேற்க வந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த கலைக்குழு ஒருங்கிணைப்பாளா் திடீரென உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே ஆண்டிப்பொற்றை பகுதியைச் சோ்ந்த ரவி மகன் பிரசாந்த் (33). திருமணமாகாத இவா், ‘குமரி கானகப் பறவைகள்’ கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்தாா். தூத்துக்குடி வஉசி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுவரும் நெய்தல் கலைத் திருவிழாவில் பங்கேற்பதற்காக பிரசாந்த் தனது குழுவினருடன் வந்திருந்தாா்.

சனிக்கிழமை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்காக தயாராகிக்கொண்டிருந்த அவா், திடீரென கீழே சரிந்து விழுந்தாா். அங்கிருந்தோா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தகவலறிந்த கனிமொழி எம்பி, முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பிரசாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கலைக் குழுவினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.