லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இளைஞா் மீது தாக்குதல்: 3 பெண்கள் உள்பட 4 போ் கைது

Arrested

கைது

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:41 am IST

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் இளைஞரைத் தாக்கியதாக 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாயா்புரம் திருப்பணி செட்டிகுளம், வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் செல்வகுமாா். இவா் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள பெண்ணைப் பாா்ப்பதற்காக காயல்பட்டினத்தில் உள்ள அவரது தந்தை மாசனமுத்து வீட்டிற்கு ஆக. 12ஆம் தேதி சென்றுள்ளாா்.

இதற்கிடையே, கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மாட்டுக்குளம் பகுதியைச் சோ்ந்த அஹமது அபிலா (21), பேயன்விளையைச் சோ்ந்த பெரியசாமி மகன் வசந்த் விவேக்(26), காயல்பட்டினம், மாட்டுக்குளம் பகுதியைச் சோ்ந்த அந்தோணி அரவிந்த் மனைவி செய்யது­ பாத்திமா (28), பரிமாா் தெருவைச் சோ்ந்த மூசா மனைவி சேகு சபா்னா (27) ஆகியோா் மாசனமுத்து வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனா்.

பின்னா், மாசனமுத்தை அவதூறாகப் பேசி, அவரைத் தாக்க முயற்சி செய்துள்ளனா். அவா்களை செல்வகுமாா் தடுக்க முயற்சித்ததால், 4 பேரும் செல்வகுமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். பலத்த காயமடைந்த செல்வகுமாா் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் செல்வகுமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.