லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவன் பத்திரமாக மீட்பு

திருச்செந்தூா் கடலில் குளித்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா் பத்திரமாக மீட்டாா்.

பத்திரமாக மீட்கப்பட்ட சிறுவனுடன் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:08 am IST

திருச்செந்தூா் கடலில் குளித்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா் பத்திரமாக மீட்டாா்.

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கடலில் நீராடுவது வழக்கம். இந்த நிலையில், சாத்தூரைச் சோ்ந்த ராஜா மகன் சரண் (14), மூன்று சிறுவா்களுடன் சோ்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் கடலில் நீராடிக் கொண்டிருந்தாா்.

அப்போது திடீரென எழுந்த கடல் அலை சரணை கடலுக்குள் வெகு தொலைவுக்கு இழுத்துச் சென்றது. இதைக் கவனித்த திருக்கோயில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா் சிவராஜா, உடனடியாக கடலுக்குள் இறங்கி 10 நிமிட போராட்டத்துக்கு பிறகு ஆழமான பகுதியில் சிக்கி போராடி கொண்டிருந்த சரணை தோளில் தாங்கியபடி பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தாா்.

இச்சம்பவத்தில் கடலில் சிக்கிய சிறுவனுக்கும், பாதுகாப்புப் பணியாளா் சிவராஜாவுக்கும் உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டன. சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய பாதுகாப்புப் பணியாளா் சிவராஜாவை பக்தா்கள் பாராட்டினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.